Anbe Peranbe Song Lyrics in Tamil - NGK

 

Anbe Peranbe Song Lyrics in Tamil - NGK



Anbe Peranbe- Song's Credit / Details
Song
Chorom Shasthobidh
SingersShreya Ghoshal, Sid Sriram
MovieNGK (2019) (என்.ஜி.கே)
Music ComposerYuvan Shankar Raja


Anbe Peranbe song lyrics is a tamil song from NGK Movie that was released on 2019. This songs lyrics are written by Uma Devi. And Anbe Peranbe song lyrics song music is composed by Yuvan Shankar Raja. This song is sung by Shreya Ghoshal, Sid Sriram.

We have given Anbe Peranbe Lyrics in  Tamil Below:


Anbe Peranbe Song Lyrics

அன்பே பேரன்பே, பேரன்பே


ஏனோ இரவோடு ஒளியாய்கூடும்
உறவொன்று  கேட்கிறேன்
வரை மீறும் இவளின் ஆசை
நிறைவேறப்  பார்க்கிறேன்.
நதி சேரும் கடலின்மீது
மழை நீராய்  சேருவேன்.

அமுதே பேரமுதே
பெண் மனதின் கனவின்
ஏக்கம் தீர்க்குமா ஏறக்குமா ?

மதியை தன் மதியை
இவன் அழகின் பிம்பம்
கண்கள் பார்க்குமா
தோற்குமா

மழை வானம் தூறும்போது
மணலென்ன கூசுமோ.
மலரோடு மலர்கள் கூட
ஊரென்ன தூற்றுமோ

திரையே திரை கடலே
உன் அதிரும் அன்பு
மதிலை தாண்டுதே
தூண்டுதே.

நெஞ்சோரம் தூங்கும் மோகம்
கண்ணோரம் தூபம்  போட
சொல்லாத ரகசியம் நீதானே
ஊர்க்கேட்க ஏங்குதே

தனிமையில் துணைவரும்
உன் யோசனை.
நினைவினில் மணக்குது
உன் வாசனை.
எல்லாமே ஒன்றாக மாறுதே
மனந்திட சேவல் கூவுதே

கோடை காலத்தின் மேகங்கள்
கார்காலம் தூறும்.
ஆளில்லாத காட்டிலும்
பூபாளம் கேட்கும்.

அன்பே பேரன்பே
நெடுவாழ்வின்  நிழல்கள்
வண்ணம் ஆகுதே, ஆகுதே
உறவே, நம் உறவே
ஒரு அணுவின் பிரிவில்
அன்றில் ஆகுதே ஆகுதே

உறையாத சொல்லின் பொருளை
மொழி இங்கு தாங்குமோ
உறவாக அன்பில் வாழ
ஒரு ஆயுள் போதுமோ.

Comments